shadow

10 நாள் பயணமாக சீனா புறப்பட்டார் சுப்பிரமணியன் சுவாமி

Subramanian-Swamyசமீபத்தில் ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்ற பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி 10 நாள் பயணமாக நேற்று சீனாவுக்கு புறப்பட்டார்.

சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முக்கிய பிரிவாக இருந்து வரும் ‘பியூபில்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பாரீன் அபயர்ஸ்’ என்ற அமைப்பு விடுத்துள்ள அழைப்பை ஏற்று அவர் சீனாவுக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது சீனாவின் மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து இந்தியா-சீனா இடையேயான தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.

மேலும் பீஜிங்கில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திலும் சுப்ரமணியன் சுவாமி உரையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சுவாமி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply