shadow

வருமான வரியை கைவிட்டால் இந்திய பொருளாதாரம் உயரும்: சுப்பிரமணியன் சுவாமி

இந்திய பொருளாதாரம் உயரவும், அதிகாரிகள் மீது மக்களுக்கு வெறுப்பு குறையவும் வருமான வரியை கைவிட வேண்டும் என்றும், இதன் மூலம் ஏற்படும் இழப்பை சரிக்கட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு மற்றும் ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் ஈடு கட்டலாம் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் டெல்லியில் நடைபெற்ற இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பான ‘அசோசெம்’ 98-வது நிறுவன தினத்தில் உரையாடிய சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:

உள்நாட்டு சேமிப்புதான் 10 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டிப்பிடிக்க உதவும். வெளிநாட்டு முதலீடு அதற்கு உதவாது. வங்கிகளில் வைப்பு நிதி மீதான வட்டியை குறைத்ததால், உள்நாட்டு சேமிப்பு 35 சதவீதத்தில் இருந்து 29 சதவீதமாக குறைந்து விட்டது. எனவே, பொருளாதார வளர்ச்சியை 10 சதவீதமாக உயர்த்த, சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில், வருமான வரி விதிப்பை இப்போதே கைவிட வேண்டும். அப்படி செய்தால், மக்கள் கொண்டாடுவார்கள். அதற்கு காரணம், அதிகாரிகள் மீதான வெறுப்புதான்.

வருமான வரியை கைவிடுவதால் ஏற்படும் இழப்பை நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு மற்றும் ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் ஈடு கட்டலாம். மேலும், வங்கிகள், முதன்மை கடன்கள் மீதான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும். வைப்பு நிதி வட்டியை 9 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரி, ஒரு பேரழிவு. பணமதிப்பு நீக்க நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட விதம் சரியல்ல. போதுமான ரொக்கம் கையில் கிடைக்க ஏற்பாடு செய்யாமல் விட்டு விட்டனர்.

இவ்வாறு சுப்பிரமணிய சாமி பேசினார்.

Leave a Reply