shadow

சுப்பிரமணியன் சுவாமி – மு.க.ஸ்டாலின் சந்திப்பு

பாஜக முத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது, அதே திருமணத்தில் கலந்து கொண்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

இருவரும் அருகருகே உட்கார்ந்து சில நிமிடங்கள் பேசிக்கொண்டனர். இதுகுறித்த வீடியோ ஒன்ரு செய்தி சேனல் ஒன்றில் வெளியானது.

தற்போதைய சூழ்நிலையில் அதிமுகவுடன் பாஜகவுக்கு பிணக்கு ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில் ஸ்டாலினை சுப்பிரமணியன் சுவாமி சந்தித்துள்ளது அரசியல் மாற்றங்களை ஏற்படுமா? என்று ஊகிக்க வைத்துள்ளது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணியன்சாமி, ‘தமிழகத்தில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு யார் வந்தாலும் உருப்பட முடியாது’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply