shadow

ரஜினியுடன் மீண்டும் இணைந்த தேசிய விருது பெற்ற ஸ்டண்ட் கலைஞர்

ரஜினியின் காலா படம் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை அடுத்து ரஜினியின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

காலா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். காலா வெளியான அன்றே, ரஜினி தன் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள வடமாநிலம் சென்றார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா போன்ற நடிகர்களுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படம் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது, வரும் பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் சண்டை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள பீட்டர் ஹெய்ன் தற்போது படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு ஸ்டண்ட் இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றவர் என்பதும் ஏற்கனவே சிவாஜி, எந்திரன் ஆகிய ரஜினி படங்களில் இவர் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சன் பிக்ஸர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Leave a Reply