shadow

உள்ளாடை அணிய தடை. இலங்கை மாணவிகளை ரேகிங் செய்த 28 மாணவர்கள்

இலங்கையில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் புதியதாக இணைந்த மாணவிகளுக்கு உள்ளாடை அணிய தடைவிதித்த சீனியர் மாணவர், மாணவியர் 28 பேர் மீது அக்கல்வி நிறுவனத்தின் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பிரயோக விஞ்ஞான பிரிவைச் சேர்ந்த 2ம் ஆண்டு மாணவிகள் மற்றும் மாணவர்கள் புதியதாக சேர்ந்த மாணவிகளுக்கு உள்ளாடை அணிய தடை விதித்து ராக்கிங்கில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த இந்த பல்கலையின் நிர்வாகம் ரேகிங் செய்த 18 மாணவிகள் உள்பட 28 மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எம்.எம்.நாஜிம் கூறியபோது, ‘மாணவர்களுக்கு உள் பனியன் அணியவே அவர்களால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எப்படியிருந்தாலும், அது உள்ளாடைகளில் ஒன்று தானே. ஆனால் மாணவிகள் உள்ளாடை அணிய தடை விதிக்கப்பட்டது தொடர்பாக எந்தவொரு புகாரும் வரவில்லை.

பிரயோக விஞ்ஞான பீடம் அமைந்துள்ள வளாகத்தில் ராக்கிங்கில் ஈடுபடுத்தப்பட்ட புதிய மாணவிகள் மற்றும் மாணவர்கள் தங்களுடைய ஆடைகளை அவர்களின் விருப்பதிற்கு ஏற்ப மாறாக அணிய வேண்டும் என அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தனர். மேலும், சிறைக் கைதிகள் போன்றும் நடத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விசாராணை நடத்த இரு விரிவுரையாளர்கள் அடங்கிய குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் அறிக்கை கிடைத்த பின் ராக்கிங் தொடர்பாக பல்கலைக்கழகத்தில் கூறப்பட்டுள்ளதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply