மாடு மேய்க்க போங்க’ என்று திட்டிய ஆசிரியர் மீது மாணவர்கள் புகார்

மாணவர்களை ஆசிரியர் திட்டினாலோ, அடித்தாலோ உடனே போலீஸ் மற்றும் கலெக்டரிடம் மாணவர்கள் மனு கொடுக்கும் அளவுக்கு காலம் மாறியுள்ளது. இதனால் பெரும்பாலான ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாவிட்டால் மாடு மேய்க்க போங்க என்று மதுரையில் உள்ள ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறியதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மாடு மேய்க்க போங்க என்று திட்டிய ஆசிரியர் மீது மாணவர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் மீது ஆட்சியர் நடவடிக்கை எடுத்தால் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யக்கூட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *