மருத்துவர்களை மிஞ்சிய ஆசிரியர்கள்: கோமாவுக்கு சென்ற மாணவரை மீட்ட அதிசயம்

கோமா நிலைக்கு சென்ற மாணவர் ஒருவரை மருத்துவர்களே கைவிட்ட நிலையில் ஆசிரியர்கள் பிழைக்க வைத்த சம்பவம் ஒன்று தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

சினிமாவில் ஒருவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டால் அவருடைய காதலன் அல்லது காதலியோ, உறவினர்களோ காதருகே பேசி உயிர்ப்பெற வைக்கும் காட்சிகள் இருக்கும். ஆனால் புதுகோட்டையை சேர்ந்த மாணவர் ஒருவரை ஆசிரியர் இதேமுறையில் மீட்டெடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை பட்குதியை சேர்ந்த அருண்பாண்டியன் என்ற மாணவர் திடீரென மயக்கம் போட்டு விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அருண்பாண்டியன் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும் பல்ஸ் இறங்கி வருவதாகவும் தெரிவித்தனர்.

மருத்துவர்களே கைவிட்டாலும் மனம் தளராத ஆசிரியர்களும், சக மாணவர்களும் அருண்பாண்டியனின் காதருகே மாறி மாறி பேசினர். பழைய சம்பவங்கள், பள்ளியில் நடந்த சம்பவங்கள், ஆகியவற்றை மாறி மாறி கூறிக்கொண்டே வந்தபோது திடீரென அருண்பாண்டியனின் கைகால் அசைந்தது. இதனையடுத்து மருத்துவர்களின் தீவிர முயற்சியால் தற்போது அந்த மாணவர் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக கூறப்படுகிறது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *