shadow

மாதவிடாயை கண்டுபிடிக்க கருவியா? சபரிமலை தேவஸ்தான தலைவருக்கு கண்டனம்.
sabarimala
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கப்படுவது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தேவஸ்தானம் போர்டு தலைவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

நேற்று கொல்லம் நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு நிருபர் சபரிமலையில் பெண்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள்? என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த தேவஸ்தான போர்டு தலைவர் பரயாறு கோபால கிருஷ்ணன் அவர்கள், “மனிதர்களிடம் ஆயுதம் இருக்கிறதா? என்பதைக் கண்டறிய தற்போது கருவிகள் உள்ளது போல பெண்கள் மாதவிடாய் காலத்தில் இருக்கிறார்களா? இல்லையா? என்பதை கண்டறிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

தேவஸ்தான போர்டு தலைவரின் இந்த பதிலுக்கு நாடு முழுவதிலும் உள்ள பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. டுவிட்டரில் #HappyToBleed என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கியும், ஃபேஸ்புக்கில் இதே பெயரில் ஒரு பக்கத்தை உருவாக்கியும் அதில் தங்களின் கண்டனத்தை பெண்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply