shadow

கமல் வீட்டில் ஒட்டப்பட்ட கொரோனா ஸ்டிக்கர் திடீர் அகற்றம்

நடிகர் கமலஹாசனின் எல்டாம்ஸ் சாலை வீட்டில் ஒருசில நிமிடங்களுக்கு முன்னால் சென்னை மாநகராட்சி ஊழியர்களால் கொரோனா குறித்த ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதால் கமல் ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதனையடுத்து கமல் தரப்பில் இருந்து இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த விளக்கத்தில், ‘கொரோனா வந்தவர்களுக்கு ஒட்டப்படும் ஸ்டிக்கர் அல்ல இது என்றும் எங்களை நாங்களே பாதுகாத்து கொண்டு இருக்கிறோம், மற்றவர்களை தொந்தரவு செய்ய மாட்டோம் என்று கூறும் மாநகராட்சியுடன் ஸ்டிக்கர்’ என்று கூறப்பட்டது.

ஆனாலும் கமல்ஹாசனுக்கு கொரோனா என்ற வதந்தி சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவியதால் மாநகராட்சி ஊழியர்கள் கமல் வீட்டில் இருந்து ஸ்டிக்கரை அகற்றினர். இதனால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *