shadow

மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவர் அதிரடி கைது

பொதுவாக 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெறும் மாணவருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவியும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் பீகார் மாநிலத்தில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்ற மாணவரை அதிரடியாக அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் கணேஷ் குமார் என்ற மாணவர் 82.6 சதவீத மதிப்பெண்களுடன் மாநிலத்தில் முதலிடம் பிடித்தார். இசைப் பாடத்திற்கான செய்முறைத் தேர்வில் 70-க்கு 65 மதிப்பெண்களும், எழுத்துத் தேர்வில் 30-க்கு 18 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இந்தி பாடத்தில் 100-க்கு 92 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் இசை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்ல அவர் திணறினார். இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த அந்த பிரிவின் ஆசிரியர்கள் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறையினர் தங்கள் பாணியில் விசாரணை நடத்திய கணேஷ்குமார் முறைகேடு செய்து தேர்வு எழுதியது தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீஸார் வழக்குப்பதி செய்து சிறையில் அடைத்தனர்

Leave a Reply