shadow

பிரபல காமெடி நடிகர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி!
madurai muthu
விஜய் டிவி மற்றும் சன் டிவியில் காமெடி நடிகராகவும், ஸ்டேண்ட் அப் காமெடி செய்து வருபவருமான மதுரை முத்துவின் மனைவி இன்று அதிகாலை விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார். திருப்பத்தூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

மதுரை திருநகர் அருகே உள்ள தனக்கன்குளம் என்ற பகுதியில் வசித்து வரும் மதுரை முத்து பிரபல நகைச்சுவையாளர் என்பது தொலைக்காட்சியை பார்ப்பவர்கள் அனைவரும் அறிவர். விஜய் டிவியில் ‘அசத்தபோவது யாரு’ என்ற பெயரில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இவர் சொல்லும் ஸ்டேண்ட் அப் காமெடி பெரும் புகழ் பெற்றது. இவருக்கு மனைவி வையம்மாள் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மதுரை முத்து புதுவீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ளார். காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கோயிலுக்கு வையம்மாள் இன்று காலை காரில் சென்றுள்ளார். காரை பாண்டி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

கார், திருப்பத்தூர் அருகே கோட்டையூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, இடது பக்க டயர் வெடித்துள்ளது. இதில் கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் பயங்கர வேகத்தில் மோதியது. இதில், வையம்மாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் பாண்டியும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, கலை நிகழ்ச்சி ஒன்றுக்காக அமெரிக்கா சென்றள்ள மதுரை முத்து, மனைவி இறந்த தகவல் தெரிந்தவுடன் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு அவசரமாக விமானம் மூலம் முத்து மதுரைக்கு வந்து கொண்டிருக்கிறார் . 

Leave a Reply