shadow

மு.க.ஸ்டாலின் ஆதரவுக்கு மம்தா நன்றி: அதிர்ச்சியில் காங்கிரஸ்

காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத தேசிய அளவிலான கூட்டணிக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு கொடுத்துள்ளதால் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது.

காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத தேசிய அளவிலான கூட்டணி ஒன்றை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சித்து வருகின்றனர். இந்த கூட்டணிக்கு பல மாநில தலைவர்கள் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் தமிழகத்தில் இருந்து திமுகவின் ஆதரவும் கிடைத்துள்ளது. இதனை ஸ்டாலின் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

இந்த நிலையில் ஸ்டாலின் டுவிடட்ர் பதிவுக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்துள்ளார். எங்களது முழு ஆதரவு உங்களுக்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

sta

Leave a Reply