கருணாநிதி உடல்நலத்திற்கு என்ன ஆச்சு? பரவிய வதந்தி குறித்து ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில ஆண்டுகளாக ஓய்வில் இருக்கின்றார். சமீபத்தில் அவருக்கு சென்னை காவேரி மருத்துவமனையில்தொண்டையில் இருந்த குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் வைக்கப்பட்டது. பின்னர் வீடு திரும்பிய கருணாநிதி நலமுடன் உள்ளார்.

இந்த நிலையில் தொண்டையில் இருந்த குழாஅகற்றிய காரணத்தால் லேசான காய்ச்சல் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து வதந்திகள் சமூக வலைத்தளத்தில் பரவின

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், ‘“தொண்டையில் இருந்த குழாயை அகற்றிய காரணத்தால் லேசான காய்ச்சல் மட்டும் கருணாநிதிகு ஏற்பட்டுள்ளது. அதற்கான சிகிச்சை பெற்று வீடு திரும்பிய கருணாநிதி பூரண உடல் நலத்துடன் உள்ளார் என்று கூறினார். மேலும் திமுக தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளதாகவும், அவரது உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் மேலும் கூறினார்.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *