shadow

முக ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்: நித்தியானந்தா ஆரூடம்

வரும் 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வருவார் என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

கைலாஷ் என்ற ஒரு புதிய நாட்டை உருவாக்கியுள்ளதாகவும், அந்த நாட்டிற்கு தானே பிரதமர் என தன்னை அழைத்து வரும் நித்தியானந்தா, மீனாட்சி நினைத்தால் ஸ்டாலின் முதல்வராவது நிச்சயம் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வர் ஆனதும் அவருக்கு கைலாஷ் அருகில் ஒரு தீவை அளிக்க உள்ளதாகவும் நித்யானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நித்தியானந்தா போல் ஒரு தீவை வாங்கி அதில் தான் முக ஸ்டாலின் முதல்வராக முடியும் என்றும், அவர் தமிழகத்தின் முதல்வராவது கனவில் கூட நடக்காது என்றும் நேற்று அமைச்சர் ஜெயகுமார் கூறிய நிலையில் இன்று முக ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் என அதே நித்தியானந்தா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *