மலேசியா சென்றால் தமிழக முதல்வர் ஆகிவிடலாமா? மு.க.ஸ்டாலின்

மலேசியாவில் உலகதாய்மொழி தினத்தை ஒட்டி நடைபெற்ற விழாவில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய மலேசியாவை சேர்ந்த ஒருவர் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் மலேசியா வந்து சென்ற பின்னரே தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார்கள் என்று கூறினார்.

மு.க.ஸ்டாலின் பேசியபோது இதுகுறித்து அவர் கூறியதாவது: அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி ஆகியோர் மலேசியா வந்து சென்ற பின்னரே முதலமைச்சர் ஆனதாக கூறிய நபர், இந்த கருத்தை அவர் மனதோடு வைத்துக் கொண்டிருக்கலாம் என நகைச்சுவையாக கூறினார்.

மேலும் முதலமைச்சர் ஆவதற்காகவே தமிழகத்தில் பலர் புதிதாக கட்சி தொடங்குவதாக கமல்ஹாசனை அவர் மறைமுகமாக தாக்கினார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *