ரஜினிகாந்த் கற்பனைக்குதிரையில் ஓடுகிறார்: ஸ்டாலின் தாக்கு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ள நிலையில் வெற்றிடத்தை நிரப்ப வந்திருப்பதாக ரஜினிகாந்த் கற்பனைக்குதிரையில் பயணம் செய்ய நினைக்கின்றார் என்று அவரை ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று திமுக மண்டல மாநாட்டில் பேசிய ஸ்டாலின், தமிழக அரசியலில் கற்பனைக் குதிரையில் பயணிக்க ரஜினி புறப்பட்டுள்ளார் என்றும், மதில் மேல் பூனை போல் கமல்ஹாசன் இருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும்‌ தமிழக அரசியலில் வெற்றிடம் எதுவும் இல்லை என்றும் வெற்றிடம் என்பது ஏற்பட்ட உடனே நிரப்பப்பட்டுவிடும் என்பது அறிவியல் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்

ஸ்டாலின் பேச்சுக்கு ரஜினி , கமல் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *