shadow

நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: தப்பித்தது ரணிலின் பிரதமர் பதவி

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இலங்கை பாராளுமன்றத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து அவரது பதவிக்கு இருந்த ஆபத்து நீங்கியுள்ளது.

பிரதமர் ரனில் மீது இலங்கை மக்கள் முன்னணி கட்சி, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தை சபாநாயகர் கரு ஜெயசூரியாவிடம் அந்தக் கட்சி அளித்துவிட்டது. அதில் அவர் மீது நிதி மோசடி செய்ததாகவும், இனக்கலவரத்தை அடக்கத் தவறி விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த தீர்மானம் இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் சுமார் 122 பேர் வாக்களித்தனர். இதையடுத்து, இலங்கை பிரதமர் ரனில் விக்ரம்சிங்கேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது

Leave a Reply