shadow

7இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்துக்கு இலங்கை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியை கடந்த 3ஆம் தேதி நேரில் சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்த மனுவில் ‘இலங்கையில் இனப்படுகொல நடந்ததாக’ குறிப்பிட்டதற்கு  இலங்கை அரசு இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நேற்று இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளரும், தகவல் தொடர்பு அமைச்சருமான கெஹேலியா ரம்புக்வெல்லா அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “

“இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்று வர்ணிப்பது மாபெரும் தவறு, தமிழக முதல்வரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய அரசுக்குத் எங்களது முறையான ஆட்சேபத்தை தெரிவிக்க உள்ளோம்.

இந்தியாவில் நிலையான ஆட்சி அமைந்ததை இலங்கை பாராட்டி வரும் வேளையில் இலங்கை குறித்து அதன் மாநில தலைவர்கள் கூறும் சர்ச்சைக்கருத்துக்களை கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது.

தமிழக முதல்வர் மாநில அளவில் பெரும் வெற்றி அடைந்திருந்தாலும், மத்தியில் செல்வாக்கு இல்லாமல் இருப்பது குறித்து இலங்கை மகிழ்ச்சி அடைகிறது. இந்திய பிரதமர் இலங்கை விஷயத்தில் சரியான முடிவுகளை மட்டும் எதிர்காலத்தில் எடுப்பார் என நம்புகிறோம்.

இலங்கை அமைச்சரின் திமிர் கருத்துக்கு தமிழக மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதை உலகமே அறியும். தமிழக முதல்வரை விமர்சிக்கும் தகுதி இலங்கை அமைச்சருக்கு இல்லை என்றும் தமிழகத்தில் இருந்து அவருக்கு கண்டனக்குரல்கள் எழுந்து வருகின்றன.

Leave a Reply