iplகடந்த ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்ற அணிகள் சென்னையில் விளையாட தடை விதிக்கப்பட்டதை போலவே இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளிலும் சென்னையில் இலங்கை வீரர்கள் பங்கேற்கும் அணிகள் விளையாட அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த தமிழ் இனப்படுகொலையால் தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளாக கொந்தளிப்பு இருந்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நடந்த போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்கவில்லை. வரும் 8ஆம் தேதி நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கவுள்ளன. இந்த தொடரிலும் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க முடியாது.

இலங்கை வீரர்கள் ஏஞ்சலா மேத்யூஸ் (டெல்லி) திசே பெரைரா (பஞ்சாப்) லஷித் மலிங்கா (மும்பை ) அணிகளுக்காக விளையாடி வருகின்றனர். சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பொதுச்செயலளார், ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழுவுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஐ.பி.எல். நிர்வாகம், இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *