shadow

இலங்கை அகதிகளை கைது செய்த இலங்கை கடற்படையினர்

இலங்கையில் நடைபெற்ற உளநாட்டு போர் காரணமாக அங்கு வசித்த தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகலாக வந்தனர். அவர்கள் இந்தியாவில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் போர் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அகதிகள் முகாம்களில் உள்ளவர் மீண்டும் இலங்கைக்கு தப்பிசெல்ல முயற்சிகள் செய்து வருவதும் அவர்களை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருவதும் தொடர்கதையாகி வருகிறது

இந்த நிலையில், இலங்கையின் காங்கேசன் துறைமுகம் அருகே பாக் கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது சந்தேகத்துககுரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒரு படகை அவர்கள் சோதனையிட்டனர். அந்த படகில் சிலர் முறையான ஆவணங்கள் இல்லாமல் பயணித்தது தெரியவந்தது. உடனே அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

அந்த படகில் பயணம் செய்த நான்கு குழந்தைகள் உட்பட 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் காங்கேசன் துறைமுகத்தில் உள்ள கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு, காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 12 பேரையும், மே 19 வரை நீதிமன்ற காவலில் வைத்திருக்க மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Leave a Reply