shadow
இலங்கை அமைச்சரவை விரைவில் மாற்றம்: அதிபர் மைத்ரிபால சிறிசேனா
இலங்கையில் கடந்த சில மாதங்களாக அரசியல் குழப்பம் இருந்து வந்த நிலையில் விரைவில் அமைச்சரவையை மாற்ற உள்ளதாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியும், இலங்கை பிரதமர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்களின் ஐக்கிய தேசிய கட்சியும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில்  சமீபகாலமாக இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தோல்விக்கு ரணில் விக்ரமசிங்கே தான் காரணம் என அதிபர் சிறிசேனா கட்சியினர் குற்றம் சாட்டினார்கள். அந்த கட்சியின் பல அமைச்சர்களும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவரை மாற்ற வேண்டும் என்றும் போர்க்கொடியும் தூக்கினார்கள்.
இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்மரசிங்கே மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் ரணில் விக்மரசிங்கே வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார். இந்த நிலையில் இலங்கை அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படும் என்றும் அப்போது அரசுக்கு எதிராக செயல்பட்ட பல அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது. 

Leave a Reply