shadow

100வது டெஸ்ட் தோல்வி: வரலாற்றில் மோசமான சாதனையை பதிவு செய்த இலங்கை

சமீபத்தில் முடிந்த நாக்பூர் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் இலங்கை அணி தனது 100வது டெஸ்ட் போட்டி தோல்வியை பதிவு செய்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த தோல்வியே இலங்கை அணியின் மிக மோசமான தோல்வி ஆகும்.

அதாவது இந்த போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் 239 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதற்கு முன்னர் இலங்கை அணி கடந்த 2001-ம் ஆண்டு கேப் டவுனில் நடைபெற்ற டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 229 ரன்களில் தோல்வியடைந்ததே மோசமான தோல்வியாக இருந்தது.

அதேவேளையில் இந்த வெற்றியின் மூலம் இந்தியா அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெருமையை பெற்றுள்ளது.

 

Leave a Reply