fishermenதமிழக மீனவர்களை இதுவரை சிங்கள கடற்படையினர்கள்தான் கைது செய்து நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் முதல்முறையாக இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களை கடத்தியதோடு அவர்களை விடுவிக்க பணம் கேட்டும் மிரட்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று தஞ்சை மாவட்டம் கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற மைக்கேல் என்பவருக்கு சொந்தமான படகில் மீன் பிடிக்க சென்ற பாண்டி, செல்வம், மாரிசெல்வம், மாணிக்கம், முனியசாமி, அக்ஸ்டின், பூரணம் ஆகிய 7 மீனவர்கள் இரவு நெடுநேரம் ஆனபின்னர் கரை திரும்பவில்லை. இதுகுறித்து அதிர்ச்சி அடைந்த மற்ற மீனவர்கள் கொண்டு சென்ற செல்போனுக்கு படகின் உரிமையாளர் மைக்கேல் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது, எதிர்முனை பேசிய இலங்கை மீனவர் ஒருவர் மைக்கேல் படகை தாங்கள்தான் பிடித்து வைத்திருப்பதாகவும், தாங்கள் கூறும் வங்கி எண்ணுக்கு பணத்தை கட்டினால் மட்டுமே கடத்தப்பட்ட 7 பேர்களையும் விடுவிப்போம் என்றும் மிரட்டியுள்ளனர்.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த படகின் உரிமையாளர், இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *