shadow

SRI_LANKA_தீவிரவாதத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட 16 தமிழ் அமைப்புகள் மற்றும் அவற்றின் ஆதரவாளர்கள் 424 பேர்கள்மீது தடை விதிக்க இலங்கையின் கோரிக்கையை அமெரிக்க அரசு நிராகரித்துவிட்ட நிலையில் இந்திய அரசு அந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் தமிழ் அமைப்புகள் இடையே இந்தியா மீது பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

தமிழ் அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் நேற்று வாஷிங்டனில் உள்ள அமெரிக்க துணை அமைச்சர் நிஷா பிஸ்வாலை சந்தித்து பேசி, தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துக்கூறியதன் காரணமாக அமெரிக்க அரசு இலங்கையின் கோரிக்கையை நிராகரித்துவிட்டதாகவும், அதே வேளையில் இந்திய அரசு இலங்கையின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளது தங்களை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர். இலங்கையின் கோரிக்கையை ஏற்கனவே கனடா நிராகரித்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

Leave a Reply