shadow

இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு தடை: வன்முறை பரவுவதை தடுக்க நடவடிக்கை

இலங்கையில் கடந்த சில நாட்களாக இரு மதங்களை பின்பற்றுபவர்களுக்கு இடையே கலவரம் மூண்டு அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நாடு முழுவதும் பேஸ்புக் உள்பட அனைத்து சமூக வலைத்தளங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்திகள் பரவுவதால் வன்முறை மேலும் தீவிரமடையும் சூழல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இலங்கை முழுவதும் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட தளங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், கண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் மொபைல் சேவைக்கும் தடை விதித்து இலங்கை தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வன்முறை நடக்கும் பகுதிகள் அமைதிக்கு திரும்பியதும் இந்த கட்டுப்பாடு விலக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply