shadow

sridivyaவருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் ஊதாக்கலரு பொம்மியாக தமிழில் அறிமுகமான நடிகை ஸ்ரீதிவ்யா, அந்த படத்தின் வெற்றி காரணமாக கோலிவுட்டில் பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். அதன்பின்னர் அவர் விஷ்ணுவுடன் நடித்த ‘ஜீவா’ மற்றும், விக்ரம் பிரபுவுடன் நடித்த வெள்ளக்கார துரை’ ஆகிய படங்களும் நல்ல வசூலை கொடுத்ததால் ஸ்ரீதிவ்யாவின் மார்கெட் எகிறியுள்ளது.

வரும் 27ஆம் தேதி சிவகார்த்திகேயனுடன் ஸ்ரீதிவ்யா நடித்த காக்கி சட்டை’ திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில், தற்போது ஜீவாவுடன் ஒரு புதிய படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். ‘யான்’ படத்திற்கு பிறகு ஜீவா நடிக்கும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

ஸ்ரீதிவ்யா ஏற்கனவே ஜி.வி.பிரகாஷுடன் ‘பென்சில்’ மற்றும் அதர்வாவுடன் ‘ஈட்டி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ‘வராதி’ என்ற தெலுங்கு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Leave a Reply