shadow

தோழிகளுடன் மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த ஸ்ரீதேவி
sridevi
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல முன்னணி கோலிவுட் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவரும் பாலிவுட் திரையுலகை சுமார் பத்து வருடங்கள் கலக்கியவருமான பிரபல நடிகை ஸ்ரீதேவி நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் தமிழில் விஜய்யின் ‘புலி’ படம் மூலம் கடந்த ஆண்டு ரீ எண்ட்ரி ஆனார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை ஸ்ரீதேவி தனது தோழிகளுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

ஸ்ரீதேவி தற்போது மும்பையில் செட்டில் ஆகியிருந்தாலும் அவருடைய சொந்த ஊர் மதுரை அருகே உள்ள சிவகாசிதான்.

சிறுவயதில் அடிக்கடி கண்டு ரசித்த மீனாட்சி அம்மன் கோவிலை பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தோழிகளுடன் வந்து மீனாட்சியின் அருளை பெற்றது தனக்கு மனநிம்மதியாக இருப்பதாக் ஸ்ரீதேவி தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த ஸ்ரீதேவியை கோவில் நிர்வாகிகள் வரவேற்று சிறப்பு பிரசாதம் அளித்தனர்.

ஒருசில மணி நேரங்கள் கோவிலை சுற்றிப்பார்த்த ஸ்ரீதேவி பின்னர் தனது தோழிகளுடன் மும்பைக்கு விமானம் மூலம் திரும்பினார்.sridevi1

Leave a Reply