தல அஜித் குறித்து ஸ்ரீதேவி கூறியது என்ன தெரியுமா?

தல அஜித் மிகவும் எளிமையானவர் என்று நடிகை ஸ்ரீதேவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பேட்டி ஒன்றில் கூறியது தற்போது வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் நடித்த ஸ்ரீதேவி விஜய்யின் புலி படத்திலும் நடித்திருந்தார். அதற்கு முன்னதாக தல அஜித்துடன் இணைந்து இங்கிலீஸ் விங்கிலீஸ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீஎண்ட்ரி கொடுத்தார்.

இதையடுத்து, நடிகை ஸ்ரீதேவி பேட்டி ஒன்றில், அஜித்தைப் பற்றி கேட்டதற்கு தமிழ் சினிமாவில் மிக எளிமையான நடிகர் யார் என்றால் அது அஜித்குமார் தான். இவர் இங்கிலீஸ் விங்கிலீஸ் என்ற படத்திற்காக கார், ஹோட்டல் என்று எந்த ஆடம்பரமும் தனக்கு தேவையில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால், படப்பிடிப்பிற்கு எப்போது வந்தார், எப்படி வந்தார் எனபது மட்டும் தெரியாது. அப்படி ஒரு நடிகர். எல்லோரிடமும் அன்பாக பழகக்கூடியவர். நடிகை ஷாலினி மூலம் தான் எனக்கு அஜித்தின் நட்பு கிடைத்தது என்று கூறியுள்ளார். தற்போது, அவரது மறைவை நினைத்து வருந்தாத நடிகர்களும் இல்லை, ரசிகர்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *