shadow

சசிகலாவுடன் பிரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் சந்திப்பு

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரையுலகை சேர்ந்த பலர் அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில் நேற்று பிரபல நடிகை ஸ்ரீதேவி தனது அஞ்சலியை செலுத்தினார்.

பின்னர் போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா மரணம் அடைந்த தினத்தில் ஜெயலலிதாவுடன் ஸ்ரீதேவி உள்ள சிறுவயது புகைப்படத்தை அவர் தன்னுடைய டுவிட்டரில் வெளியிட்டு தனது இரங்கலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply