மும்பையில் ஸ்ரீதேவி உடல்: இன்று மதியம் உடல் தகனம்

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் உடல் நேற்றிரவு மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடல் அவரது கணவர் போனிகபூரின் இல்லத்தில் நேற்று வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலக திரையுலக பிரபலங்கள் தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தினர்.

நேற்றிரவு முழுவதும் போனிகபூர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீதேவியின் உடல், இன்று காலை காலை 9.30 மணி முதல்12.30 மணி வரை மும்பை ஸ்போர்ட்ஸ் கிளப்பில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கபப்டவுள்ளதாகவும், ஆதன் பின்னர் பிற்பகல் 2 மணிக்கு அவரது உடல் இறுதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாலை 3.30 மணிக்கு முடிவடைந்து வில்லிபார்லியில் உடல் தகனம் செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த ஊர்வலத்தில் ஸ்ரீதேவியின் லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் விவிஐபிக்கள் கலந்து கொள்ள இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் கனவு நாயகியை கடைசியாக பார்க்க பெருமளவில் ரசிகர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *