shadow

இலங்கை நாடாளுமன்றம் திடீரென இரவில் கலைப்பு. தேர்தல் எப்போது?

sri_lankaஇலங்கை பாராளுமன்றத்தைக் கலைக்க அந்நாட்டு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா நேற்று இரவு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தனது உத்தரவில் பிறப்பித்துள்ளதால் நேற்றுடன் இலங்கை பாராளுமன்றம் அதிகாரபூர்வமாக கலைக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலின்போது, இலங்கை பாராளுமன்றத்தை உடனடியாக கலைத்துவிட்டு வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என மைதிரிபாலா சிறிசேனா வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதிக்கு தற்போது நிறைவேற்றும் வகையில் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவில் நேற்று அதிபர் சிறிசேனா கையொப்பமிட்டார். இந்த உத்தரவு அரசு அறிவிப்பாணையாக இலங்கையில் வெளியாகியுள்ளது.

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் வரும் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இருக்கும் நிலையில் முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கு வசதியாக தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

விரைவில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் மூலம் மீண்டும் அதிகாரம்மிக்க இடத்தை பிடிக்க முன்னாள் அதிபர் ராஜபக்சே முடிவு செய்து வரும் பாராளுமன்ற தேர்தலில் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக இலங்கையில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

Leave a Reply