shadow

SLMC-logo-1_CIஇலங்கையில் வரும் ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கின்ற நிலையில் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலகிக் கொள்ளப்போவதாக சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த சனிக்கிழமை அறிவித்துள்ளதால் அதிபர் ராஜபக்சேவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எடுத்த தீர்மானத்தின்படி பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவு செய்திருப்பதாகவும், அரசில் இருந்து விலகிக்கொள்வதோடு தனது நீதி அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்யபோவதாகவும் கட்சித்தலைவர் ரவூஃப் ஹக்கிம் தெரிவித்துள்ளார்.

2010ம் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏழு தொகுதிகளை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு அமைச்சர்கள் பதவியை பெற்றிருந்த இக்கட்சி திடீரென விலகியதால் ஆளும் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள இந்த தீர்மானம் காரணமாக தமிழகர்கள் பகுதியில் ஆரவாரம் செய்து மகிழ்வுடன் வரவேற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply