shadow

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி. இந்தியா அதிர்ச்சி தோல்வி

cricketஇந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக எளிதில் வெற்றி பெற்றுவிடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இலங்கை அணி அபார வெற்றி பெற்று இந்திய அணியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

இலங்கை அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரித்து ஆடி 367 ரன்களை குவித்தது. சண்டிமால் 247 பந்துகளில் 162 ரன்கள் குவித்தார். இந்நிலையில் முதல் இன்னிங்சில் 375 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி வெற்றி பெற 176 ரன்களே தேவை என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது. ஆனால் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹெராத்தின் அபாரமான சுழல்பந்தில் இந்திய வீரர்கள் சொற்ப ரன்களுக்கு தங்கள் விக்கெட்டை பறிகொடுத்து 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 63 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர்.

ஆட்டநாயகனாக சண்டிமால் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று விளங்குகிறது.இரு அணிகளுக்கும் இடையேயான அடுத்த டெஸ்ட் போட்டி வரும் 20ஆம் தேதி கொழும்பு நகரில் தொடங்கவுள்ளது.

Leave a Reply