shadow

ஆசியா கோப்பை: எளிய இலக்கு வெற்றியை கோட்டை விட்ட ஐக்கிய அரபு எமிரேட்
Lasith Malinga
ஆசியா கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில் நேற்று இரவு இரண்டாவது போட்டி இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரெட் நாடுகளுக்கு இடையே மிர்பூர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட் டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் சண்டிமால் 50 ரன்கள் எடுத்தார்.

130 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய மலிங்கா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Chennai Today News: Sri Lanka v United Arab Emirates. Sri Lanka won by 14 runs

Leave a Reply