shadow

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் நடராஜனுக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து அவர் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நடராஜன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர் உள்பட 6 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சன் ரைசர்ஸ் அணியின் நடராஜனுக்கு கொரோனா ஏற்பட்ட போதிலும் இன்றைய போட்டியை திட்டமிட்டப்படி நடைபெறும் என்றும் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் இன்று மோதல் என்றும் நிர்வாகம் அறிவித்துள்ளது.