shadow

p48

தேவையானவை: குடமிளகாய், கேரட்  தலா- 2, முட்டைகோஸ்  100 கிராம், சோயா சாஸ்  ஒரு டீஸ்பூன், வெள்ளை மிளகுத்தூள்  ஒரு டீஸ்பூன், சமையல் எண்ணெய்  -4 டீஸ்பூன், சில்லி சாஸ், தக்காளி சாஸ்  தலா -2 டீஸ்பூன், வெங்காயம் – 2 (வட்டமாக நறுக்கவும்), உப்பு  சிறிதளவு.

அலங்கரிக்க: வட்டவடிவில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட்  தேவையான அளவு, நறுக்கிய கொத்தமல்லித்தழை  சிறிதளவு.

செய்முறை: ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வட்டமாக ரிங் வடிவில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பின்னர் துருவிய கேரட், நீளமாக மெல்லியதாக நறுக்கிய குடமிளகாய், முட்டைகோஸ் சேர்த்துக் கிளறவும். காய்கள் நன்கு வதங்கிய பின் வெள்ளை மிளகுத்தூள், உப்பு சேர்த்து மேலும் கிளறவும். பின்னர் சில்லி சாஸ், சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்து எல்லாம் நன்கு கலக்குமாறு கிளறி இறக்கவும். இதுதான் ஸ்டஃப்பிங்.

பிறகு, முறுகலான தோசை வார்த்து, எடுக்கும் முன், செய்து வைத்திருக்கும் ஸ்டப்ஃபிங்கை தோசையின் ஒரு ஓரத்தில் வைத்து, அப்படியே சுருட்டி சுருட்டி ரோலாக செய்து தட்டில் வைக்கவும். தோசை ரோல்கள் மேலே, வட்ட வடிவ வெங்காயம், தக்காளி, கேரட் மற்றும் கொத்தமல்லித்தழை தேவையான அளவு தூவி அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.

தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லாத இந்த தோசை மழலைப் பட்டாளத்தைக் கவரும்.

Leave a Reply