shadow

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படத்தை ரிலீஸ் செய்யும் லைகா

‘கத்தி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்த ‘லைகா புரடொக்ஷன்ஸ்’ நிறுவனம் அதன் பின்னர் ‘2.0’, ‘சபாஷ் நாயுடு’ உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து வரும் நிலையில் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள ‘ஸ்பைடர்’ படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது. இந்த படத்தை உலகம் முழுவதும் பிரமாண்டமாக புரமோஷன் செய்து வெளியிட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த தகவலை லைகா நிறுவனத்தின் ராஜூ மகாலிங்கம் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள அடுத்த படமான ‘விஜய் 62’ படத்தையும் லைகா நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அவர் இயக்கிய படத்தை ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மகேஷ்பாபு, ராகுல் ப்ரித்திசிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள ‘ஸ்பைடர்’ படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படம் வரும் செப்டம்பரில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply