shadow

பிரிட்டன் பெண் பிரதமரின் கையை பிடித்து நடந்த டிரம்ப்

அமெரிக்க அதிபராக பதவியேற்று கொண்ட டொனால்ட் டிரம்ப் அவர்களை பிரிட்டன் பெண் பிரதமர் தெரசா மே நேற்று வெள்ளை மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பத்திரிகையாளர் முன் டிரம்ப், தெரசா மே கையை பிடித்து நடந்து சென்ற காட்சியை பல போட்டோகிராபர்கள் படம் பிடித்தனர்.

ஒருவருக்கொருவர் நினைவு பரிசுகளை வழங்கி கொண்ட பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். இதில் டிரம்ப் கூறியதாவது:

பிரிக்ஸிட் பிரிட்டனுக்கு மிகவும் அற்புதமானதாக இருக்கும். இதனால் புதிய வர்த்தகத்துக்கான கதவுகள் திறக்கும். தொழிலதிபராக இருந்த போது ஐரோப்பிய யூனியனில் இருந்து வர்த்தக ஒப்பந்தம் பெறுவது கடினமானதாக இருந்தது என்றார்.

தெரசா மே பேசுகையில், “பதவியேற்ற உடனே அமெரிக்காவிற்கு அழைத்ததற்காக எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதிபர்

தேர்தலில் வெற்றி பெற்றதற்காக எனது வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். டிரம்ப் நூறு சதவீதம் நேட்டோ படையின் பின்புலமாக இருப்பார்” என்றார்

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்றதை தொடர்ந்து, டிரம்பை சந்தித்துள்ள முதல் வெளிநாட்டு தலைவர் தெரசா மே ஆவார்.

Leave a Reply