shadow

வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய இன்று சென்னை மக்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாக்காளர் அட்டையில் பெயர் சேர்க்க, நீக்க மற்றும் திருத்தம் செய்ய ஆகியவைகளுக்கு சென்னையில் இன்று சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களும் வாக்காளர் அட்டை திருத்தம் செய்ய சென்னையில் இந்த சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு மையங்களை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ளும்படி தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.