shadow

prabhu savaanகர்நாடக சட்டசபையில் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் செல்போனில் ஆபாச படம் பார்த்த பாரதிய ஜனதா எம்.எல்.ஏ ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் அனைத்து கட்சிகளில் எம்.எல்.ஏக்களும் பங்குகொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது பாரதிய ஜனதா எம்.எல்.ஏ பிரபு சவாண், தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்தார். இதை கவனித்த வீடியோகிராபர் ஒருவர் அதை படம்பிடித்து வெளியிட்டுள்ளார்.

இந்த பிரச்சனை சட்டசபையில் பெரும் அமளியை உருவாக்கியது. பிரபு சவாண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் சட்டசபையில் கோஷம் போட்ட்னர்.

இதையடுத்து தன்னுடைய செயலுக்கு வருந்துவதாக பிரபுசவாண் மன்னிப்பு கேட்டார். ஆயினும் சபாநாயகர் பிரபுசவாணை ஒருநாள் சட்டசபை நடவடிக்கைகளில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார். மேலும் இனிமேல் சட்டசபையில் உறுப்பினர்கள் யாரும் செல்போனை கொண்டுவரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply