shadow

ஸ்பெயின் தேர்தல்: யாருக்கும் மெஜாரிட்டி இல்லை. கூட்டணி ஆட்சியா?
spain pm
ஸ்பெயின் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை எனப்படும் மெஜாரிட்டி கிடைக்காததால், தற்போதைய பிரதமர் கூட்டணி ஆட்சிக்கு முயற்சி செய்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மரியானோ ரஜா அவர்களின் பாப்புலர் கட்சி, எதிர்க்கட்சி தலைவரான பொடிமோஸ் அவர்களின் லிபரல் சியுடாடனோஸ் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. தற்போது வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பிரதமர் மரியோனோ ரஜாவின் பாப்புலர் கட்சி 28.7 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தபோதிலும், ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி இல்லை. இதனால் பிரதமரின் பாப்புலர் கட்சியும் சோஷலிச கட்சியும் இணைந்து ஆட்சி செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த தேர்தலில் சோஷலிச கட்சி 22 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கத். எதிர்க்கட்சியான லிபரல் சியுடாடனோஸ் கட்சி வெறும் 13.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply