shadow

புறப்பட்ட இரண்டே வினாடிகளில் வெடித்து சிதறிய அமெரிக்க ராக்கெட். அதிர்ச்சி வீடியோ

shadow

விண்வெளி ஆராய்ச்சியில் உலகிலேயே முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்கா, இன்று அனுப்பிய ஒரு ராக்கெட் புறப்பட்ட சில வினாடிகளிலேயே வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில் உள்ள ஃப்ளோரிடா என்ற மாநிலத்தில் உள்ள கேப் கெனாவரல் என்ற ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு நேற்று  அமெரிக்க தனியார் ராக்கெட் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ஏவப்பட்டது. இந்த ராக்கெட் செலுத்தப்பட்ட 2.19 வினாடிகளிலேயே நடுவானில் வெடித்துச் சிதறியதால் விஞ்ஞானிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான இந்த பால்கான் 9 ராக்கெட் ஏவப்படுவதற்கு முன் அந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணணயதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது. கவுண்ட் டவுண் முடிந்ததும் சரியான நேரத்தில் ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.

இருப்பினும் எதிர்பாராத விதமாக அந்த ராக்கெட்டின் முதல் பகுதி பிரிவதற்கு முன், புறப்பட்ட 2.19 வினாடிகளிலேயே நடுவானில் வெடித்துச் சிதறியது. இது தொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ”ராக்கெட்டுடனான வீடியோ தொடர்பு முழுவதுமாக செயலிழந்துவிட்டதாக தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் அமெரிக்காவின் ‘நாசா’ அதிர்ச்சி அடைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. 1,800 கிலோ விண்வெளி பொருட்களும், கருவிகளும் இருந்த ராக்கெட்டில் மனிதர்கள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை எனினும் மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர் வீணாகிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து, முழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Leave a Reply