shadow

soya

என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி – 2 கப்,
சோயா பீன்ஸ் – 1 கப்
வெங்காயம்  – 1
தக்காளி  – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 டீஸ்பூன்
புதினா- 1/2 கப்
கொத்தமல்லி- 1/2 கப்
சிவப்பு குடமிளகாய் – 1
பச்சை மிளகாய்  – 4
தயிர்  – 1/4 கப்
தண்ணீர்  – 3 கப்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
முந்திரிப்பருப்பு – 10
நெய்  – 2 டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

சோம்பு- 1 டீஸ்பூன்
பட்டை  – 1
கிராம்பு  – 2
எப்படி செய்வது?

வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குடமிளகாயை மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் அல்லது நெய் காய வைத்து அதில் சோம்பு, பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி, தக்காளியைப் போடவும். தக்காளி வதங்கியதும் சோயா பீன்ஸ், புதினா, கொத்தமல்லி, சிவப்பு குடமிளகாய், பச்சை மிளகாய் என்று ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். பின் தயிர் ஊற்றி ஒரு வதக்கு வதக்கி பச்சரிசியைப் போடவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு வேக விடவும். வெந்தவுடன் திறந்து நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து தயிர் பச்சடியுடன் பரிமாறவும்.

Leave a Reply