shadow

ship

கடந்த செவ்வாய்க்கிழமை தென்கொரிய கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 58 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 244 பேர்கள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. மீட்புப்படையினர்களும், ஆழ்கடல் நீச்சல் வீரர்களும் மீட்புப்பணியில் தீவிர முயற்சியில் இருக்கின்றனர்.

இந்நிலையில் தென்கொரிய அதிபர் பார்க் குன் ஹையி, இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “தென்கொரிய கப்பலின் கேப்டன் மற்றும் கப்பல் நிர்வாகிகளின் செயல்கள் திட்டமிட்ட கொலைக்கு சமம் என்றும், பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கேப்டன், முதல் ஆளாக தப்பித்து வந்தது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் கூறியுள்ளார்.

இந்த விபத்திற்கு முழு பொறுப்பு பாதுகாப்பு குறைப்பாடுகளே ஆகும். கப்பல் நிர்வாகிகள் இந்த பேரழிவிற்கு பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் மீது சட்டபூர்வமான கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதுவரை 100 கடலோரகாவலர்களும், கடற்படைகப்பல்களும், மீன்பிடிகப்பல்களும், 18 ஹெலிகாப்டர்களும்மீட்புப்பணியில்ஈடுபட்டுவருகின்றன. கப்பலில்சுற்றுலாசென்ற 100க்கும்மேற்பட்டமாணவர்களின்கதிகுறித்துதென்கொரியஅரசுமிகுந்தகவலைகொள்வதாகதெரிவித்துள்ளது

Leave a Reply