shadow

வடகொரியாவுக்கும் வாஷிங்டனுக்கும் செல்வேன்: தென்கொரிய புதிய அதிபர்

தென்கொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக பதவியேற்றுக்கொண்ட மூன் ஜயே-இன், வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே இணக்கமான சூழ்நிலை ஏற்பட வடகொரியா சென்று அந்நாட்டு அதிபரை சந்திப்பேன் என்றும் தேவைப்பட்டால் வாஷிங்டனுக்கு செல்ல விரும்புவதாக கூறினார்

மேலும் அவர் கூறியபோது, ‘நான் அனைத்து மக்களுக்கும் அதிபராக இருப்பேன். எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் பணி செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன். நாட்டின் பாதுகாப்பு குறித்த விவகாரத்தில் உங்களது கருத்துக்களை கேட்க விரும்புகிறேன். உங்களுடைய ஒத்துழைப்பு வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார்.

வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் போர் எந்த நேரத்திலும் வெடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் தென்கொரிய அதிபரின் இந்த சமாதான பேச்சு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி போரை தடுத்துவிடும் என்றே கூறப்படுகிறது.

Leave a Reply