shadow

அண்டை நாடுகளை மிரட்டுகிறது சீனா: அமெரிக்கா குற்றச்சாட்டு

தென்சீனக் கடல் பகுதியில் ஏவுகணைகளை நிறுத்தி அண்டை நாடுகளை சீனா மிரட்டி வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.

சீனாவின் தென்பகுதியில் உள்ள தென்சீனக்கடலில் செயற்கை தீவுகளை அமைத்து, அதை ராணுவமயமாக்கி வருவதாக சீனா மீது பரவலாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. சமீபத்தில் அங்கு உள்ள பராசல் தீவின் அங்கமான ஊடி தீவில் சீனா கனரக போர் விமானங்களை நிறுத்தியது. இதை சீனா ஒப்புக்கொண்டது. ஆனால் சீனா அந்தப் பிராந்தியத்தை சீர்குலைப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ மந்திரி ஜெனரல் ஜேம்ஸ் மேட்டிஸ் கூறியதாவது:தென் சீனக்கடல் பகுதியில் கப்பல்களை தாக்கும் ஏவுகணைகள், தரையில் இருந்து வானுக்கு சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க ஏவுகணைகள், மின்கருவிகளை செயலிழக்க செய்கிற ஜாமர் கருவிகளை சீனா ஏராளமாக நிறுத்தி வைத்து உள்ளது.

இவற்றை சீனா நிறுத்தி வைத்து இருப்பதின் நோக்கம், அண்டை நாடுகளை மிரட்டுவதும் அச்சுறுத்துவதும்தான். சீனாவின் நடவடிக்கைகள் அதன் பரந்த நோக்கங்களை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது. சீனாவுடன் அமெரிக்கா ஆக்கப்பூர்வமான உறவைப் பராமரிக்கத்தான் விரும்புகிறது. அதே நேரத்தில் தேவைப்பட்டால் அந்த நாட்டுடன் தீவிரமாக போட்டியிடுவோம். இந்த பிராந்தியத்தில் சீனா முக்கிய பங்கு ஆற்ற வேண்டும் என்பதை அமெரிக்கா அங்கீகரிக்கிறது’ என்று கூறியுள்ளார்

Leave a Reply