shadow

தென்னாப்பிரிக்கா-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி டிரா

தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட் செய்து முதல் இன்னிங்சில் 308 ரன்கள் எடுத்தது. இதற்கு பதிலடியாக நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 341 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 224 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்திருந்தது. இந்நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டு இந்த போட்டியின் முடிவு டிரா என அறிவிக்கப்பட்டது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் அடுத்த போட்டி வரும் 16ஆம் தேதி வெல்லிங்டனில் நடைபெறும்

Leave a Reply