ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்ட்யில் பரிதாபமான நிலையில் தென்னாப்பிரிக்கா

இந்திய அணியிடம் ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடர்களில் தோல்வி அடைந்த தென்னாப்பிரிக்க அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. மார்ச் 1 ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பரிதாபமான நிலையில் உள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 110.4 ஓவர்களில் 351 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வார்னர் 51 ரன்களும், மார்ஷ் 96 ரன்களும் எடுத்தனர். இந்த நிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 51.4 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டிவில்லியர்ஸ் மட்டும் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து 71 ரன்கள் அடித்தார்.

189 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில் தென்னாப்பிரிக்க அணி இந்த போட்டியில் தோல்வியை தவிர்க்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *