shadow

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி. தோல்வியை தவிர்க்க தென்னாப்பிரிக்கா தீவிரம்
India v SA 4th Test D5
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோல்வியை தவிர்க்க தென்னாப்பிரிக்க அணி போராடி வருகிறது.

கடந்த 3ஆம் தேதி தொடங்கிய 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்திய அணி 117.5 ஓவர்களில் 334 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரஹானே மிக அபாரமாக விளையாடி 127 ரன்கள் எடுத்தார். அஸ்வின் 56 ரன்களும், கோஹ்லி 44 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. டிவில்லியர்ஸ் மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடி 42 ரன்கள் எடுத்தார். இஷாந்த் சர்மா மற்றும் யாதவ் தலா 4 விக்கெட்டுக்களையும் ஜடேஜா 3 விக்கெட்டுக்களையும் அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் 2வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி, 100.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 481 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்டுக்களை இழந்து 94 ரன்கள் எடுத்துள்ளது. கைவசம் ஏழு விக்கெட்டுக்கள் உள்ள நிலையில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற இன்னும் 387 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் அந்த அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

English Summary: South Africa require another 387 runs with 7 wickets remaining

cricket1

Leave a Reply