தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி. வெற்றி பெறும் நிலையில் இந்தியா

India v SA 3rd Test D3இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மூன்றாவது நாளான இன்றே முடிவு தெரிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 79 ரன்களுக்கு ஆட்டமிழந்ததை அடுத்து இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்தியா 2வது இன்னிங்ஸில் 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனால் 310 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா தனது 2வது இன்னிங்ஸில் 32 ரன்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் நேற்றைய 2வது நாள் ஆட்டம் நிறைவு பெற்றது. 8 விக்கெட்டுக்கள் கையில் உள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா இன்னும் 278 ரன்கள் எடுக்க வேண்டும். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

English Summary:South Africa require another 278 runs with 8 wickets remaining

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *